ஒரு மணி நேரத்தில் 300 பீட்சாக்களை செய்யும் ரோபோ

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

Picnic எனும் நிறுவனம் அதி நவீன ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இந்த ரோபோவானது ஒரு மணி நேரத்தில் சுமார் 300 பீட்சாக்களை தயார் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பீட்சாவும் 12 அங்கு விட்டத்தினைக் கொண்டதாக இந்த ரோபோ தயார் செய்கின்றது.

தற்போதைய காலகட்டத்தில் ஒன்லைன் ஊடாக பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்படுகின்றமையால் குறுகிய நேரத்தில் அதிக பீட்சாக்களை செய்வதற்கு இந்த ரோபோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒன்லைன் ஊடாக கிடைக்கும் ஆர்டர்களை தனக்குரிய உள்ளீடாகப் பெற்று உடனடியாகவே பீட்சாவை தயார் செய்யக்கூடியதாக இருக்கின்றமை இந்த ரோபோவின் மற்றுமொரு சிறப்பியல்பாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்