போட்டோஷோப் மென்பொருளை நிறுத்துகின்றது அடோப் நிறுவனம்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
63Shares

சீனாவின் ஹுவாவி நிறுவனத்தினை வியாபாரக் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

இதனை அடுத்து மற்றுமொரு அதிரடி நடவடிக்கையினை கடந்த ஆகஸ்ட் மாதம் எடுத்துள்ளார்.

அதாவது வெனிசுலா நாட்டுடனான அனைத்து வியாபார உறவுகளையும் துண்டித்துள்ளார்.

இதனை அடுத்து அமெரிக்க மென்பொருள் நிறுவனமான அடோப் அந்நாட்டிற்கான தனது உற்பத்தி சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி இம் மாதம் 28 ஆம் திகதிக்கு பின்னர் அடோப் நிறுவனத்தில் உள்ள அனைத்து வெனிசுலா நாட்டு கணக்குகளும் முடக்கப்படவுள்ளது.

அதுவரை அந்நாட்டினை சேர்ந்தவர்கள் அடோப் மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

இந்த தகவலை அடோப் நிறுவனமே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்