இந்த இணைய உலாவியினை பயன்படுத்தினால் இனி உங்களை யாரும் Track செய்ய முடியாது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஒருவரை இலக்கு வைத்து அவரின் இணைய நடவடிக்கைகளை ஓர் இடத்திலிருந்தே கண்காணிக்க முடியும்.

இதற்கு இணைய உலாவிகளில் உள்ள குறைபாடுகளும் காரணமாகும்.

எனவே இதனைத் தவிர்ப்பதற்கு ஒபேரா இணைய உலாவியில் சிறப்பு வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒபேரா இணைய உலாவியினை வடிவமைக்கும் குழு தகவல் வெளியிட்டுள்ளதுடன் புதிய அப்டேட் ஒன்றினையும் அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியானது Track Blocker என அழைக்கப்படுகின்றது.

இதனை செயற்படுத்தினால் இணையத்தினூடாக எவரும் கண்காணிக்க முடியாது.

இதேவேளை ஒபேரா ஏற்கனவே வரையறையின்றிய VPN சேவையை பயனர்களுக்காக அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்