வாட்ஸ் ஆப்பின் Fingerprint Unlock வசதி தற்போது அன்ரோயிட் சாதனங்களிலும்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பயோமெட்ரிக் எனப்படும் Fingerprint Unlock பாதுகாப்பு வசதியானது இவ் வருட ஆரம்பத்தில் iOS சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப்பில் வழங்கப்பட்டிருந்தது.

இவ் வகையான பயோமெட்ரிக் பாதுகாப்பானது வங்கிகளில் அப்பிளிக்கேஷன்களில் ஏற்கணவே தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவரின் தனிப்பட்ட வாட்ஸ் ஆப் செயலியினை மற்றையவர்கள் திறந்து பார்ப்பதை தவிர்க்க முடியும்.

இவ் வசதியானது தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அன்லாக் வசதியினை ஒரு நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் வரை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

இதனைச் செயற்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப்பின் Privacy Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

எனினும் இவ் வசதி சில பிரதேங்களிற்கு இதுவரை காண்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers