எலக்ட்ரிக் கார்களை 10 நிமிடத்தில் சார்ஜ் செய்யலாம்: அசத்தலான புதிய தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

வெறும் 10 நிமிடங்களில் 100 சதவீதம் எலக்ட்ரிக் கார்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இத் தொழில்நுட்பமானது extreme fast charging (XFC) என அழைக்கப்படுகின்றது.

EV பட்டரிகள் (Electric vehicle battery) எனப்படும் இவை ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் லேப்டொப் என்பவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பட்டரிகளைப் போன்றே மீள் பாவனைக்கு உட்படுத்தக்கூடியவை.

எனினும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இவற்றினை ஏறத்தாழ 2,500 தடவைகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும் என பொறியியலாளரான Chao-Yang Wang தெரிவித்துள்ளார்.

தவிர இவ்வாறு ஒரு முறை சார்ஜ் செய்யப்படும் பேட்டரியின் உதவியுடன் 200 மைல்கள் தொடக்கம் 300 மைல்கள் வரை பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்