WhatsApp Payments சேவையை அறிமுகம் செய்வதில் புதிய சிக்கல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலகிலேயே அதிகளவு பயனர்களைக் கொண்ட இந்தியாவில் முதன் முறையாக WhatsApp Payments சேவை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

இதற்கான அனுமதியை இந்திய அரசிடம் பெறுவதற்கான வேலைத்திட்டங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனினும் பயனர்களின் பாதுகாப்பு கருதி இதற்கு அனுமதி அளிப்பதற்கு இந்திய அரசு பின்னடித்துவருகின்றது.

Reserve Bank of India (RBI) மற்றும் National Payments Corporation of India (NPCI) என்பன ஒப்புதல் அளித்தால் மாத்திரமே இந்திய அரசும் அனுமதியளிக்கும்.

இப்படியிருக்கையில் வாட்ஸ் ஆப்பினூடாக ஒட்டுக்கேட்டல் மற்றும் உளவுபார்த்தல் என்பன இடம்பெற்றுவருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனவே பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களும் உளவுபார்க்கப்படும் அச்சம் நிலவுவதால் இச் சேவை அறிமுகம் செய்யப்படுவதில் மேலும் இழுபறி நிலவுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers