ஒரே நேரத்தில் 100GB வரையான தரவை பரிமாற்றம் செய்யலாம்: Dropbox அதிரடி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
71Shares

Dropbox என்பது ஒரு க்ளவுட் ஸ்டோரேஜ் சேவையாகும்.

அதாவது ஒன்லைனில் தரவுகளை சேமித்து வைக்கும் சேவையை இது தருகின்றது.

இதனை இலவசமாக 2GB வரை பயன்படுத்த முடிவதுடன் கட்டணம் செலுத்தி மேலும் விரிவாக்கம் செய்துகொள்ள முடியும்.

தற்போது Dropbox ஆனது அதி உச்சமாக 100GB தரவினை ஒரே நேரத்தில் பரிமாற்றம் செய்யக்கூடிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் இது கட்டணம் செலுத்தி சேவையை பெறும் குறிப்பிட்ட பயனர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.

இலவச சேவையைப் பயன்படுத்திவருபவர்கள் 100MB கொள்ளளவுடைய தரவினை ஒரே தடவையில் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

அத்துடன் இது ஏற்கனவே தரப்பட்டுள்ள வசதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்