பயனர்களுக்காக தனது அப்பிளிக்கேஷனில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
27Shares

அன்ரோயிட் சாதனங்கள் மற்றும் iOS சாதனங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்த Gboard அப்பிளிக்கேஷன் பற்றி அறிந்திருப்பீர்கள்.

இதன் மூலம் வெவ்வேறு வகையான மொழிகளில் பயனர்கள் இலகுவாக தட்டச்சு செய்யக்கூடியதாக இருக்கும்.

அதேவேளை சட் செய்யும்போது GIF வடிவிலான அனிமேஷன் ஸ்டிக்கர்களையும் பரிமாற முடியும்.

எழுத்துக்கள் மற்றும் ஈமோஜி என்பவற்றிற்கு இடையில் GIF கோப்புக்கள் அண்மைக் காலமாக தொடர்பாடலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

இதனைக் கருத்தில்கொண்டு Gboard ஊடாக GIF கோப்புக்களை மிகவும் இலகுவாக பரிமாறக்கூடிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்துள்ள நிலையில் சில பயனர்களுக்கு மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.

Gboard 8.8 பீட்டா பதிப்பில் தரப்பட்டுள்ள இவ் வசதியானது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்