பயனர்களின் உதவியை நாடும் டுவிட்டர்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சமூகவலைத்தளங்களில் இன்று போலியான தகவல்கள் ஏராளமாக பரவி வருகின்றன.

இவற்றினை தடுப்பதற்கு முன்னணி சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை சிறந்த பலனைத் தரவில்லை.

இப்படியிருக்கையில் டுவிட்டர் நிறுவனம் சற்று வித்தியாசமான முறையில் போலி தகவல்களுக்கு எதிராக போராடவுள்ளது.

இதன்படி பயனர்களின் உதவியை நாட முடிவெடுத்துள்ளது.

அதாவது இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட ஒரு வீடியோ அல்லது புகைப்படங்கள் என்பவற்றினை உள்ளடக்கிய போஸ்ட்கள் தொடர்பில் சில கருத்து கணிப்பு கேள்விகளை டுவிட்டர் கேட்கும்.

இதற்கு பயனர்கள் ஒவ்வொருவரும் பதில் அளிக்க வேண்டும்.

குறித்த பதில்களை அடிப்படையாகக் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள போஸ்ட் ஆனது போலியான தகவல்களைக் கொண்டிருக்கின்றதா என கண்டறியப்பட்டு நீக்கப்படும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்