இரத்த அழுத்தத்தை கணிப்பதற்கான ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன் தொடர்பில் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றாக உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வசதி காணப்படுகின்றது.

இதற்காக ஏராளம் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படியிருக்கையில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் இரத்த அழுத்தத்தை கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட Instant Blood Pressure அப்பிளிக்கேஷன் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

AuraLife நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது உயர் இரத்த அழுத்தங்களுக்கு துல்லியமான கணிப்பினைக் காட்டவில்லை என காரணம் காட்டப்பட்டுள்ளதுடன், அதனை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Johns Hopkins University School of Medicine ஆராய்ச்சியாளர்களே இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

அதேவேளை இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தும்போது கைப்பேசியின் மேற்பக்க மூலையினை இடது பக்க மார்பின்மேல் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் பயனர்கள் தமது வலது கை ஆட்காட்டி விரலை கமெராவின் மீது வைத்து இரத்த அழுத்தத்தை அளவிடுகின்றனர்.

எனவே முறையான அளவீடு பெறப்படாமைக்கு இதுவும் ஒரு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்