டுவிட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கணக்கினை ஹேக் செய்தவர் கைது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிவரும் Jack Dorsey என்பவரது டுவிட்டர் கணக்கு அண்மையில் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கணக்கினை ஹேக் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SIM swapping தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது முதலில் Jack Dorsey இன் மொபைல் இலக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

அதனைப் பயன்படுத்தியே அவரின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் அவரின் டுவிட்டர் பக்கத்தில் இனவேறுபாடு தொடர்பான கருத்துக்களையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்