கூகுள் போட்டோஸில் தரப்பட்டிருந்த வசதியில் அதிரடி மாற்றம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

புகைப்படங்களை தரவேற்றம் செய்வதுடன் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழும் வசதியையும் தரும் சேவையாக கூகுள் போட்டோஸ் விளங்குகின்றது.

இதில் மற்றவர்களுக்கு டேக் (Tag) செய்யும் வசதியும் காணப்படுகின்றது.

எனினும் புகைப்படங்களில் உள்ளவர்களை Face Recognize முறையில் தானாவே இனங்கண்டு டேக் செய்யக்கூடியதாக இருந்தது.

இவ் வசதியில் தற்போது மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் தானியங்கி முறைக்கு பதிலாக பயனர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு (Manual) டேக் செய்ய முடியும்.

இவ் வசதி மாற்றம் தொடர்பான தகவல் ஆனது கூகுளின் Android Police தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புகைப்படத்தில் உள்ள எந்தவொரு முகத்தினையும் தவறவிடாது டேக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்