பொருள் கொள்வனவில் புதிய மாற்றத்தினை கொண்டு வரும் பிளிப்கார்ட்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இந்தியாவின் முன்னணி ஒன்லைன் சொப்பிங் சேவையான பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய மாற்றம் ஒன்றினைக் கொண்டுவந்துள்ளது.

இதற்காக Visa Safe Click (VSC) எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி விசா கார்ட்டினை பயன்படுத்தி மேற்கொள்ளும் கொள்வனவுகளின்போது பாதுகாப்பிற்காக One Time Passwored (OTP) பயன்படுத்துவது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் 2,000 ரூபா வரையான பணத்தினை விசா கார்ட் மூலம் செலுத்தும்போது OTP அவசியம் இல்லை.

இத் தொகைக்கும் அதிகான தொகையில் கொள்வனவு செய்யும்போது மாத்திரமே OTP பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இதன் காரணமாக பயனர்கள் 2,000 ரூபா வரையான விரைவாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்