2020 ஆம் ஆண்டு புதுவருட நாள் அன்று ஆப்பிள் பயனர்கள் சுமார் 386 மில்லியன் டொலர்களை ஆப்ஸ் ஸ்டோரில் செலவு செய்துள்ளனர்.
இது கடந்த புதுவருடத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.
அத்துடன் புதிய சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
இதேபோன்று 2019 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு புதுவருடப்பிறப்பு வரையான காலப் பகுதியில் சுமார் 1.42 பில்லியன் வியாபாரம் ஆப்ஸ் ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது.
இது கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகமாகும்.
இதேவேளை இதுவரையான காலப்பகுதியில் ஆப்ஸ் டெவெலொப்பர்கள் மொத்தமாக 155 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.