ஸ்மார்ட் கைப்பேசிகளை குளிர்மையாக வைத்திருக்க புதிய தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஒரு கணினிக்கு இணையான செயற்பாட்டினை கொண்டுள்ள ஸ்மார்ட் கைப்பேசிகள் அதிகமாக வெப்பமடைகின்றன.

இதனால் அவை வெடித்து சிதறிய சந்தர்ப்பங்களும் உண்டு.

இவ்வாறான பிரச்சினைக்கு விஞ்ஞானிகள் புதிய தீர்வு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக நீராவியை உருவாக்கும் கவசம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இது கைப்பேசிகளை குளிர்மையாக அல்லது வெப்பமடையாது வைத்திருக்கும்.

மேலும் கைப்பேசிகளில் ஏற்கணவே காணப்படும் PCM தொழில்நுட்பத்தினை விடவும் 10 மடங்கு குளிர்மையாக வைத்திருக்கக்கூடிய தன்மை இதற்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் Shanghai Jiao Tong பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்