ஜிமெயில் சேவையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் இம் மாற்றத்தினை பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

சாதாரண பயனர்கள் மாத்திரமன்றி கூகுளின் G Suite சேவையைப் பயன்படுத்துபவர்களும் இம் மாற்றத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தகவலை தனது வலைப்பூ தளத்தின் ஊடாக கூகுள் வெளியிட்டுள்ளது.

அத்துடன் முதலில் G Suite பயனர்களுக்காக இம் மாதம் 20 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் இவ் வசதிகள் சாதாரண பயனர்களுக்காக மார்ச் மாதம் 5 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இம் மாற்றங்களுள் Multiple Inbox சேவையும் ஒன்றாகும்.

அதாவது ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இன்பாக்ஸினை பயன்படுத்த முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers