கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடிக்க விசேட ஹெல்மட்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கொரோனா வைரஸின் ஆரம்ப இடமாக சீனா காணப்படுகின்றது.

தற்போது ஏனைய நாடுகளில் மிக வேகமாக பரவிவருகின்ற நிலையில் சீனாவில் இதன் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியாக மிகுந்த அவதானிப்பில் இருக்கின்றது சீனா.

இந்நிலையில் அங்குள்ள பொலிசாருக்கு விசேட தலைக்கவசம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதில் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வசதிகளின் ஊடாக கொரோனா நோயாளிகளை இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.

இதற்காக வெப்பநிலையை அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, வாகனத்தின் இலக்கத்தகட்டினையும் கண்டறிந்து தகவல் வழங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் தலைக்கவசத்தின் முன்பகுதியில் வெப்பநிலையைக் காண்பிக்கக்கூடிய திரை காணப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்