கொரோனா வைரஸ் பாதிப்பினால் கைகளை சுத்தப்படுத்த ரோபோக்கள்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை கழுவதற்காக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

Asimov Robotics எனும் ரோபோ தயாரிப்பு நிறுவனத்திலேயே இவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இங்கு சுமார் 600 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்கு இடையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காகவே இந்நடைமுறை பின்பற்றப்படுவதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...