கூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்சல் ஊடாக சட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் இது குறித்த ஆள்களப் பெயரின் (Domain) உள்ளே இருந்தவாறே மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் தற்போது கூகுள் ஆள்களப் பெயரிற்கு வேளியே இருந்தவாறும் சட்டிங் செய்யக்கூடிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதியில் இருந்து இவ் வசதியினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எனினும் இது G Suite பயனர்களுக்காக மாத்திரமே முன்னர் அறிமுகம் செய்யப்படுகின்றது.

எவ்வாறெனினும் கூகுள் ஆள்களப் பெயரிற்கு வெளியிலிருந்து சட் செய்யக்கூடியதாக இருக்கின்ற போதிலும் இவ் வசதியினைப் பெறுவதற்கு கூகுள் கணக்கு ஒன்று அவசிமாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்