யூடியூப்பில் கின்னஸ் சாதனை படைத்த 89 வயதான மூதாட்டி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பிரபல வீடியோ பகிரும் தளமான யூடியூப்பினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாக காணப்படுகின்றது.

எனினும் அதிக அளவில் இளைஞர், யுவதிகளே பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில் ஜப்பானைச் சேர்ந்த 89 வயதான மூதாட்டி ஒருவர் வீடியோ ஹேம் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளதுடன் தற்போது கின்னஸ் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

Gamer Grandma எனும் யூடியூப் சனலின் ஊடாகவே தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

Hamako Mori எனும் பெயரைக் கொண்ட இவருக்கு மிகவும் வயதான ஹேமிங் வீடியோ பதிவேற்றுனர் என்ற தகைமையின் அடிப்படையில் குறித்த கின்னஸ் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போதுவரை இவரது யூடியூப் சனலை 270,000 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர் என்பது விசேட அம்சமாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்