பேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின் ஊடாக ஒன்லைன் சொப்பிங் செய்யக்கூடிய வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடமே இதற்கான அடித்தளத்தினை பேஸ்புக் நிறுவனம் போட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக மேலதிக வசதிகளை உள்ளடக்கி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ் வசதியினை பேஸ்புக்கில் மாத்திரமன்றி அந்நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் ஆப் என்பவற்றிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் உலகில் அதிகளவானவர்கள் பயன்படுத்தும் பேஸ்புக் தளத்தில் இவ் வசதி அறிமுகம் செய்யப்படுவது ஏனைய ஒன்லைன் சொப்பிங் தளங்களுக்கு பாரிய பின்னடைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்