நள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

யூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் காணப்படுகின்றன.

அதுமாத்திரமன்றி பல்வேறு துறைசார்ந்த அறிவைப் பெருக்கக்கூடிய வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றினை இரவு நேரங்களில் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகின்றது.

இதனால் முறையான நித்திரை இன்றி தவிப்பதுடன் அடுத்தநாள் எரிச்சலூட்டும் வகையிலான உணர்வினை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

இதனை விரும்பாத யூடியூப் ஆனது புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

குறித்த வசதியானது Bedtime Reminder என அழைக்கப்படுகின்றது.

இதன் மூலம் யூடியூப் வீடியோக்களை பின்னிரவுகளில் பார்வையிடுபவர்களுக்கு அவர்கள் நித்திரைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டும்.

எனவே பயனர்கள் வீடியோ பார்வையிடுவதை தவிர்த்து தூக்கம் செய்ய முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்