ஆப்பிள் நிறுவனம் தற்போது iOS 14 எனும் புதிய இயங்குதளத்தின் பீட்டா பதிப்பினை பரிசோதனைக்காக வெளியிட்டுள்ளது.
இதில் பயனர்களின் தனநபர் தகவல்களை பாதுகாப்பதற்காக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் LinkedIn அப்பிளிக்கேஷனில் உள்ள இரகசியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த அப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்கள் நகல் செய்யும் விடயங்கள் கண்காணிக்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகல் செய்யப்படும் தகவல்கள் பொதுவாக Clipboard எனும் பகுதியில் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும்.
இப் பகுதியில் உள்ள தகவல்களையே LinkedIn நிறுவனம் கண்காணித்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.