அடுத்தவருடம் ஜுலை மாதம் வரை கூகுள் நடைமுறைப்படுத்தவுள்ள விடயம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை.

இதன் தாக்கத்தினால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு தமது பணியாளர்களை வேண்டிக்கொண்டது.

இவற்றில் கூகுள் நிறுவனமும் ஒன்றாகும்.

தற்போதுவரை கூகுளின் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தவாறு தொலை அணுகல் முறையில் பணியாற்றிவருகின்றனர்.

இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை வீட்டிலிருந்தவாறு தொலை அணுகல் முறையில் பணியாற்ற அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை அமேஷான் நிறுவனமும் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை தனது பணியாளர்களை மீள அழைக்கப்போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்