Spotify புதிய மைல்கல்லை எட்டியது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சுவீடனை தளமாகக் கொண்ட மிகப்பெரிய ஒன்லைன் மியூசிக் தளமாக Spotify காணப்படுகின்றது.

தற்போது இத்தளமானது சுமார் 299 மில்லியன் செயற்படு நிலையில் உள்ள பயனர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 29 சதவீதத்தினால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அத்துடன் சுமார் 138 மில்லியன் கட்டணம் செலுத்தி சேவையைப் பெறும் பயனர்களையும் Spotify கொண்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 27 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான தரவுகளை வெளியிடும்போது இந்த தகவல்களை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்