பழைய டயர்களை மீண்டும் பயன்படுத்தலாம்: பொறியியலாளர்கள் அதிரடி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சமகாலத்தில் உலகள அவில் அதிகமாக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் பயன்படுத்தப்படும் டயர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பாவனைக்கு உதவாத நிலைக்கு மாறுகின்றது.

இதனால் அவற்றினை சேமித்து வைக்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது.

எனினும் அவை மக்கும் தன்மை அற்றமையினால் சூழலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இதனைத் தவிர்ப்பதற்கு மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் சில நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

எனினும் அவை முழுமையாக அனைத்து டயர்களையும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய திட்டங்கள் இல்லை.

எனவே குறித்த டயர்களை மீண்டும் வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் பாதைகளில் மாற்றங்களை மேற்கொள்ள பொறியியளாலர்கள் முன்வந்துள்ளனர்.

இதற்காக பழுதடைந்து டயர்களைப் பயன்படுத்தியும் இலாவகமாகப் பயணிக்கக்கூடிய வகையில் பாதையை அமைக்கும் புதிய முறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

இம் முறை மூலம் 100 சதவீதம் டயர்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியும என அவுஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்