ஒன்லைனில் தரவுகள் மற்றும் தகவல்களை பாதுகாத்து வைத்திருத்தல் தற்போது மிகவும் பிரபல்யமடைந்துவருகின்றது.
இதனை கிளவுட் கணினி என்று அழைக்கப்படும்.
இவ்வாறான சேவையை நிறுவனங்களுள் Dropbox உம் ஒன்றாகும்.
இதில் தற்போது கோப்புக்களை பாதுகாக்கும் வசதி மற்றும் கடவுச் சொற்களை கொடுத்தல் போன்றன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயனர்கள் எவ்வித பயமும் இன்றி தமது கோப்புக்களை மிகவும் பாதுகாப்பாக பேண முடியும்.
இவ் வசதியானது Plus, Professional, மற்றும் Family Plans போன்ற எந்தவொரு கணக்கினை வைத்திருக்கும் பயனர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
தவிர Dropbox இன் டெக்ஸ்டாப் அப்பிளிக்கேஷன், மொபைல் அப்பிளிக்கேஷன் மற்றும் இணையத்தளம் என்பவற்றிலும் இவ் வசதி கிடைக்கக்கூடியதாக இருக்கின்றமை விசேட அம்சமாகும்.