இணையத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் தற்போது பிரபல்யமடைந்துவருகின்றன.
இவற்றினை கூகுள், அமேஷான் போன்ற நிறுவனங்கள் வடிவமைத்து வழங்குகின்றன.
இந்த ஒரு சாதனத்தினை பயன்படுத்துவதனால் ஏற்கணவே பயன்படுத்தி வந்த சில சாதனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியமே காணப்படாது.
இதனால் வீட்டில் இருக்கும் இலத்திரனியல் கருவிகளின் எண்ணிக்கையையும் குறைத்துக்கொள்ள முடியும்.
அவற்றினைப் பற்றி இங்கே பார்க்கலாம்,
- பாடல்களை கேட்பதற்கு பயன்படுத்தப்படும் பழைய ஸ்பீக்கர்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
- குரல்வழி கட்டளைகள் மூலம் சாதனங்களை இயக்கும் வசதியை ஸ்மார்ட் ஸ்பீக்கர் வழங்குதால் ரிமோர்ட் கன்ரோலர்களை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.
- இச் சாதனத்தில் அலார வசதி தரப்பட்டிருப்பதனால் அலாரத்திற்காக பிரத்தியோக சாதனம் ஒன்று பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- குரல்வழி கட்டளைகள் மூலம் அழைப்புக்களை ஏற்படுத்துதல், குறுஞ்செய்திகளை அனுப்புதல் போன்றவற்றினை செய்வதால் மாற்று சாதனம் தேவையில்லை.
- ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ரேடியோ அலவரிசைகளை செவிமடுக்க முடியும். எனவே FM ரேடியோக்கள் அவசியம் இல்லை.
- திரையுடன் கூடிய ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் காணப்படின் டிஜிட்டல் போட்டோட பிரேம் அவசியம் இல்லை.
- LED மின் விளக்குகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் ஸ்மார்ட் ஸ்பீக்கரில் தரப்பட்டுள்ளதால் சுவிட்ஜ் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.