பல்லாயிரக்கணக்கான பயனர்களின் தகவல்கள் ஒன்லைன் டிக்கட் புக்கிங் தளத்திலிருந்து கசிவு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
23Shares

இன்று அனேகமான நடவடிக்கைகள் ஒன்லைனிற்கு மாற்றப்பட்டுள்ளன.

இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசியும் வாய்ப்புக்களும் அதிகமாகவே இருக்கின்றது.

இவ்வாறு இந்தியாவில் உள்ள Railyatri எனும் ஒன்லைன் புக்கிங் தளத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பயனர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்ச அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தாம் பயணம் செய்வதற்காக ஒன்லைனில் டிக்கட்டினை புக் செய்த சுமார் 700,000 பயனர்களின் தகவல்கள் இவ்வாறு கசிந்துள்ளன.

இவற்றுள் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள், கிரடிட் அல்லது டெபிட் கார்ட் இலக்கங்கள் மற்றும் டிக்கட் தொடர்பான விபரங்கள் என்பனவும் அடங்குகின்றன.

எவ்வாறெனினும் கிரடிட் கார்ட் இலக்கங்கள் பகுதியளவிலேயே கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தரவுத்தளத்தில் சுமார் 37 மில்லியன் பயணிகளின் தகவல்கள் காணப்படுகின்ற நிலையில் 7 இலட்சம் பயணிகளின் தகவல்கள் மாத்திரமே கசிந்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்