குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை பேஸ்புக் நிறுவனம் தனது வலைத்தளத்தின் இடைமுகத்தினை மாற்றியமைத்து வருகின்றமை தெரிந்ததே.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தனது புதிய வடிவமைப்பினை சில பயனர்களுக்கு பேஸ்புக் அறிமுகம் செய்து வருகின்றது.
எனவே ஏற்கணவே தரப்பட்டுள்ள கிளாசிக் டிசைன் ஆனது முழுமையாக நிறுத்தப்படவுள்ளது.
அதாவது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அனைத்து பயனர்களுக்கும் புதிய டிசைன் வழங்கப்படவுள்ளதுடன், பழைய கிளாசிக் டிசைனிற்கு விடைகொடுக்கவுள்ளது பேஸ்புக்.
இதில் டார்க் மோட் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் நீண்ட காலமாக கிளாசிக் டிசைனை பயன்படுத்தி வந்து பயனர்களுக்கு புதிய வடிவமைப்பானது ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் புதிய டிசைனில் பல்வேறு இலகுபடுத்தல்களை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.