ஐந்து நாடுகளில் கூகுள் தரவுள்ள அட்டகாசமான வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள புதிய அன்ரோயிட் இயங்குதளத்தில் அட்டகாசமான வசதி ஒன்றினை வழங்கவுள்ளது.

அதாவது Truecaller எனும் அப்பிளிக்கேஷன் ஆனது இன்று மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் தொலைபேசி இலக்கங்களை வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

அத்துடன் தீங்கு விளைவிக்கக்கூடிய கைப்பேசி அழைப்புக்களை தவிர்க்கவும் முடியும்.

இவ்வாறானதொரு வசதியையே கூகுள் தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது முதன் முதலில் 5 நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளது.

இவற்றில் இந்தியாவும் உள்ளடங்குகின்றது.

மேலும் இவ் வசதியில் அழைப்பினை ஏற்படுத்துபவரின் பெயர், லோகா, Varification Symbol என்பனவும் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்