அன்ரோயிட் 11 இயங்குதளத்தில் தரப்படவுள்ள முக்கியமான வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனமானது விரைவில் அன்ரோயிட் 11 எனும் புதிய இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்கணவே இதன் பீட்டா பதிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அசல் பதிப்பினை வெளியிட காத்திருக்கின்றது.

இதில் சில புதிய அம்சங்கள் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவற்றில் திரைகளின் செயற்பாடுகளை பதிவு செய்யும் வசதியும் (Screen Recording) ஒன்றாகும்.

தற்போது அன்ரோயிட் சாதனங்களில் திரைகளின் செயற்பாடுகளை பதிவு செய்வதற்கு பிரத்தியேக அப்பிளிக்கேஷன்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே கூகுள் நிறுவனம் தனது சொந்த அப்பிளிக்கேஷன் ஒன்றினை அன்ரோயிட் 11 இயங்குதளத்தில் அறிமுகம் செய்கின்றது.

இதேவேளை குறித்த இயங்குதளப் பதிப்பானது Google Pixel, OnePlus, Xiaomi, Oppo மற்றும் Realme போன்ற சாதனங்களில் நிறுவப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்