கூகுளின் இச் சேவையை இனி முழுமையாக இலவசமாகப் பயன்படுத்த முடியாது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
89Shares

வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Google Meet வசதி பற்றி அறிந்திருப்பீர்கள்.

இச் சேவையினை கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலவசமாகப் பயன்படுத்தக்கூடியதான வசதியை அந்நிறுவனம் வழங்கியிருந்தது.

இதன்படி ஒரு பயனர் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது.

அத்துடன் ஒரே நேரத்தில் 100 நபர்கள் வரையில் இவ் வீடியோ அழைப்பில் பங்குகொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

எனினும் இச் சலுகை செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது.

அதாவது ஒக்டோபர் மாதம் முதல் பயனர் ஒருவர் அதிகபட்சமாக 60 நிமிடங்கள் வரை மாத்திரமே இலவசமாக இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமான வசதிகளைப் பெற விரும்பின் கட்டணம் செலுத்தப்பட்ட சேவையினையே பயன்படுத்த வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்