கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்படும் வாகன ஐகான்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஒரிடத்திலிருந்தவாறே உலகின் பல இடங்கள் மற்றும் பாதைகளில் நீளங்கள் என்பவற்றினை அறிய முடிவதுடன் பயணங்களின்போதும் வழிகாட்டியாக இருக்கின்றது கூகுள் மேப்.

இந்த அப்பிளிக்கேஷனில் கூகுள் நிறுவனம் மேலும் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது Vehicle Icon எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதி ஏற்கணவே iOS சாதனங்களுக்கான கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் தற்போது அம்புக்குறி வடிவில் காண்பிக்கப்படும் வாகனத்தின் ஐகானை சிவப்பு நிற கார், பச்சை நிற பிக்கப் ட்ரக் மற்றும் மஞ்சள் நிற SUV கார் என்ற ஐகான்களிற்கு மாற்ற முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்