யூடியூப் கொண்டுவரவுள்ள தடை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

வீடியோ பகிரும் தளங்களில் முதல்வனாக யூடியூப் விளங்கி வருகின்றது.

பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ள இத் தளத்தில் விளம்பரங்களும் காண்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பாக தவறான வழிகாட்டுதல்களை கொண்டிருக்கும் விளம்பரங்களை தடை செய்யவுள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி தற்போது கொரோனா வைரஸ் உலகளவில் அதிகமாக இருப்பதனால் இது தொடர்பான தகவல்களை மக்கள் தேடி அறிந்து வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பான வீடியோக்களும் அதிகளவில் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே குறித்த வீடியோக்களில் தவறான தகவல்களை கொண்டிக்கும் வீடியோக்களையும் தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை பேஸ்புக் நிறுவனமும் இவ்வாறான விளம்பரங்களை தடை செய்யவுள்ளதாக நேற்றைய தினம் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்