புதிய Password Protections வசதியை ஸ்மார்ட் கைப்பேசியில் பயன்படுத்துவது எப்படி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இவ் வாரத்தின் ஆரம்பத்தில் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

Password Protections என்பதே குறித்த புதிய வசதியாகும்.

இதன் மூலம் இணைய உலாவியில் வழங்கப்பட்டுள்ள கடவுச் சொற்கள் ஒன்லைனில் கசிந்துள்ளதா என்பதை கண்டறிய முடியும்.

இவ் வசதியானது குரோம் 86 பதிப்பிலேயே கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

  • முதலில் கூகுள் குரோம் உலாவியினை திறக்க வேண்டும்.
  • Settings பகுதிக்கு சென்று Password என்பதை கிளிக் செய்யவும்.
  • அங்கு Check Passwords என்பதை கிளிக் செய்து அறிந்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்