கூகுள் மேப்பில் மற்றுமொரு புதிய வசதி அறிமுகம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சில தினங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் வாகனங்களின் லோகோவினை மாற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது தெடார்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய வசதியினை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி பரபரப்பாக இருக்கும் உணவு விடுதிகள் மற்றும் கடைகள் என்பன தொடர்பான தகவல்களையும் காண்பிக்கவுள்ளது.

இதனால் வாகனங்களில் பயணிக்கும் பயனர்கள் தமது சௌகரியத்திற்கு ஏற்றவாறான உணவு விடுதிகள், கடைகள் என்பவற்றிற்கு செல்ல முடியும்.

அத்துடன் பயணங்களையும் இலகுவாக முன்கூட்டியே திட்டமிடவும் முடியும்.

இவ் வசதியானது அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் மேப் அப்பிளிக்கேஷன்களில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்