நிறுத்தப்படுகின்றது கூகுளின் Hangouts சேவை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பல வருடங்களுக்கு முன்னரே கூகுளினால் அறிமுகம் செய்யப்பட்ட சேவையாக Hangouts காணப்படுகின்றது.

இதன் மூலம் ஜிமெயிலில் இருந்தவாறு சட் செய்ய முடிவதுடன், அழைப்புக்களையும் ஏற்படுத்த முடியும்.

எனினும் தற்போது பல வசதிகளுடன் கூகுள் சட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் Hangouts சேவையினை நிறுத்துவதற்கு கூகுள் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் Hangouts சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச் சேவையினை கூகுள் சட்டில் பெற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கணவே Hangouts சேவையை பயன்படுத்தி வந்தவர்கள் தாம் சட் செய்த ஹிஸ்ட்ரி, உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல் முகரிகள் என்பவற்றினையும் கூகுள் சட்டிற்கு மாற்ற முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்