கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது.
இலவசமாக வழங்கப்பட்டு வரும் இச் சேவையானது உலகில் அதிகளவான மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்சல் சேவையாகவும் இருக்கின்றது.
இந்நிலையில் இச் சேவைக்காக ஏற்கணவே வழங்கப்பட்டிருந்த லோகா தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்னர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை கொண்ட அஞ்சல் உறை வடிவில் லோகா தரப்பட்டிருந்தது.
தற்போது கூகுளின் பிரதான வர்ணங்களான நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வர்ணங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அஞ்சல் உறை வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மாற்றப்பட்ட புதிய லோகோவானது அனேகமான பயனர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இப் புதிய லோகோ தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.