Pokémon Go ஹேமினை அறிந்திராதவர்கள் இருக்கவே முடியாது.
அந்த அளவிற்கு வயது வேறுபாடு இன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்ததுடன், உலகின் பல நாடுகளில் விபத்துக்கள் ஏற்படவும் காரணமாக இருந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இக் ஹேம் ஆனது இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி மேலும் நிஜத்தன்மையை மேம்படுத்தவுள்ளதாக இக் ஹேமினை தயாரித்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
இக் ஹேமில் 20 படிமுறைகள் காணப்படுகின்றன.
இவை அனைத்திலும் இவ்வாறு நிஜத்தன்மை மேம்படுத்தப்படவுள்ளது.
இதனால் ஹேம் பிரியர்களை மேலும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.