கூகுள் குரோமில் தரப்படவுள்ள புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
71Shares

உலக அளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவியாக கூகுள் குரோம் காணப்படுகின்றது.

இந்த உலாவியில் தற்போது புதிய வசதி ஒன்று தரப்படவுள்ளது.

அதாவது குரோம் உலாவியில் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட புதிய டேப்களை திறக்க முடியும்.

இவ்வாறு திறக்கப்படும் டேப்கள் பொதுவாக எந்தவொரு இணையப் பக்கத்தினையும் காண்பிக்காது, வெறுமையாகவே இருக்கும்.

எனவே இவ்வாறான புதிய டேப்களில் விளம்பரங்களை காண்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஒன்லைன் சொப்பிங் சேவைகளுக்கான விளம்பரங்களே காண்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் கூகுள் நிறுவனம் தனது வருமானத்தினை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்