அபார வளர்ச்சியை எட்டியுள்ள Spotify

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
16Shares

ஒன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக Spotify விளங்குகின்றது.

இச் சேவையினை உலகெங்கிலுமிருந்து பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இலவசம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட சேவைகளை இந்நிறுவனம் வழங்கிவருகின்றது.

இப்படியிருக்கையில் குறித்த சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி 320 மில்லியன் மாதாந்த ஆக்டிவ் பயனர்களை Spotify கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 144 மில்லியன்பயனர்கள் கட்டணம் செலுத்தப்பட்ட ப்ரீமியம் சேவையை பயன்படுத்தி வருபவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்