டிசம்பர் மாதம் முதல் Microsoft Teams சேவையில் வரவுள்ள புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
101Shares

தற்போது வீட்டிலிருந்து வேலை செய்தல் என்ற வாக்கியமானது உலகிலுள்ள அனேகமான தொழில்நுட்ப நிறுவனங்களால் உச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு காரணம் கொரோனா பரவல் தொற்றாகும்.

எனவே வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு Microsoft Teams எனும் சேவையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இச் சேவையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் Multiple Accounts வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது டெக்ஸ்டாப் கணினிகளில் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட Microsoft Teams கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.

இதனால் ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களை ஒரே நேரத்தில் நிர்வகிக்க முடியும்.

மேலும் இவ் வசதியானது Teams Education, Standard, மற்றும் GCC (Government Cloud) customers என்பவற்றில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்