கண்பார்வையற்றவர்களுக்காக கூகுள் அறிமுகம் செய்யும் புதிய சாதனம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
134Shares

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய முறைமைகளை அறிமுகம் செய்வதில் கூகுள் முன்னணியில் திகழ்கின்றது.

இந்த வரிசையில் தற்போது கண்பார்வையற்றவர்களுக்காக புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட முறைமை ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

பொதுவாக கண்பார்வையற்றவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.

ஆனால் இப் புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்டு அவர்கள் சுயமாகவே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ஓடிச் செல்லக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஹக்தோன் நிகழ்வு ஒன்றில் இலாபநோக்கமற்ற நிறுவனம் ஒன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியான தோமஸ் பனிக் என்பவர் கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் முகமாக தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்யுமாறு கூகுள் பொறியிலாளர்களிடம் கேட்டிருந்தார்.

இதற்கிணங்க குறித்த சாதனமானது உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்