முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்டரானது சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
இப்படியான நிலையில் தற்போது பெண்களுக்கு எதிரான உள்நாட்டு வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய ஈமோஜிக்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.
இன்றைய தினம் சில ஈமோஜிக்கள் இவ்வாறு அறிமுகம் செய்யப்படுகின்ற நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டும் மேலும் சில ஈமோஜிக்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்காக UN Women மற்றும் UN Human Rights Office என்பவற்றுடன் இணைந்து டுவிட்டர் நிறுவனம் பணியாற்றுகின்றது.
இதேவேளை பெண்களுக்கு எதிரான உள்நாட்டு வன்முறை தொடர்பில் மாதம்தோறும் சுமார் ஒரு மில்லியன் வரையான டுவீட்கள் செய்யப்படுகின்றமை டுவிட்டர் நிறுவனத்தினால் அவதானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.