டிக் டாக்கில் 100 மில்லியன் பின்தொடருநர்களை பெற்று சாதனை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
67Shares

சிறிய அளவிலான டப்பிங் வீடியோக்களை பதிவேற்றுவதற்கும், பகிர்ந்து மகிழ்வதற்கும் பெயர் பெற்ற அப்பிளிக்கேஷனாக டிக் டாக் விளங்குகின்றது.

இதனை உலக அளவில் பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களில் முதன் முதலில் 100 மில்லியன் பின்தொடருநர்களை பெற்றவர் என்ற பெருமையை 16 வயதுடைய Charli D’Amelio எனும் இளம் பெண் பெற்றுள்ளார்.

இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவராவார்.

தனது நடன திறமையினை வீடியோக்களாக பதிவு செய்து டிக்டாக்கில் பதிவேற்றம் செய்து வந்தார்.

இதனை ரசிக்கத் தொடங்கிய பயனர்கள் அவரை டிக்டாக்கில் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை சடுத்தியாக அதிகரித்து வந்த நிலையில் 100 மில்லியனை எட்டியுள்ளது.

இதேவேளை போப்ஸ் பத்திரிக்கையின் தகவலின்படி Charli D’Amelio டிக்டாக் மூலம் இதுவரை 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருமானமாக ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்