ஸ்மார்ட் கைப்பேசிகள் இலத்திரனியல் பகுதிகளைக் கொண்டிருப்பதனால் நீர் புகும்போது பழுதடையக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது.
ஆனால் மற்றைய கைப்பேசிகளை விடவும் ஐபோன்களில் நீர் உட்புகும் அளவு மிக மிகக் குறைவாகும்.
எனினும் ஸ்பீக்கரினுள் நீர் புகும்போது அது பழுதடையக்கூடிய சாத்தியம் அதிகமாக இருக்கின்றது.
இதனை தவிர்ப்பதற்கு Water Eject எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.
இதனை ஐபோனில் நிறுவி அதற்கான Shortcut இனை உருவாக்கி கொள்ள வேண்டும்.
இதனை Siri மூலம் கட்டளை வழங்கி செயற்படுத்த முடியும்.
நீர்புகும்போது இந்த அப்பிளிக்கேஷனை செயற்படுத்தினால் ஸ்பீக்கரின் ஒலியின் அளவினை 50 சதவீதத்தினால் தானாகவே குறைக்கும் செயன்முறை மூலம் நீரை அகற்றுகின்றது.
அத்துடன் நீர் அகற்றப்பட்டமைக்கான நோட்டிபிக்கேஷனையும் காண்பிக்கக்கூடியதாக இருக்கின்றது.