டெலிகிராம் செயலி பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
47Shares

வாட்ஸ் ஆப்பினைப் போன்றே பிரபலமான குறுஞ்செய்தி செயலியாக டெலிகிராம் காணப்படுகின்றது.

எனினும் வாட்ஸ் ஆப்பினை விடவும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இந்த அப்பிளிக்கேஷனில் அதிகமாகக் காணப்படுன்றன.

ஆப்பிளின் மொபைல் சாதனங்களில் இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி ஆப்பிள் Siri மூலம் டெலிகிராமில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளை வாசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வசதியானது டெலிகிராம் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பில் தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுவது தொடர்பாக இவ் வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற WWDC 2020 நிகழ்வில் ஏற்கணவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்