இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஆண்டு தோறும் தனது தேடுபொறியில் தேடப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவது வழக்கமாகும்.
அதேபோன்று குறித்த வருடத்தில் உலகம் முழுவதும் இடம்பெற்ற தகவல்களை வீடியோவாக யூடியூப்பில் வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது.
எனினும் இவ்வரும் உலக அளவில் எண்ணிலடங்காத சோக நிகழ்வுகளும், குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
இதனால் குறித்த வீடியோவினை இவ் வருடம் வெளியிடுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்திய அளவில் 2020 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட 10 விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி,
- Indian Premier League
- Coronavirus
- US election results
- PM Kisan Scheme
- Bihar election results
- Delhi election results
- Dil Bechara
- Joe Biden
- Leap day
- Arnab Goswami
ஆகிய சொற்களே அதிகமாக தேடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.