ஒன்லைன் மூலம் பாடல்களை கேட்டு மகிழக்கூடிய வசதியினை Spotify தருகின்றது.
அத்துடன் Spotify தளத்திலுள்ள பாடல்களை மாத்திரமே இதன் அப்பிளிக்கேஷன் ஊடாக கேட்டு மகிழக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
எனினும் இவ் வசதியில் சிறிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களையும் இனி Spotify அப்பிளிக்கேஷனில் பிளே செய்ய முடியும்.
இவ் வசதியினைப் பெறுவதற்கு Spotify செட்டிங் பகுதியில் சென்று Show Device Files என்பதை Enable செய்தால் போதும்.
எவ்வாறெனினும் அன்ரோயிட் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கே இவ் வசதி முதன் முதலில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spotify is finally working on on-device local files support for Android!
— Jane Manchun Wong (@wongmjane) December 6, 2020
No need to sync it from your desktop anymore :D pic.twitter.com/fVKiFAyxbs